×

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க கோரிக்கை

உத்தமபாளையம், செப். 6: உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். உள் நோயாளிகளாக 72 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விபத்துக்களோ, நெஞ்சு வலி, மூச்சு திணறல் ஏற்பட்டு அவசர சிகிச்சைக்கு வரும்போது முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பும் அவலம் தொடர்கிறது. அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவினை 24 மணிநேரமும் இயக்கிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அவசர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் 3 டாக்டர்களை நியமித்து, ஐ.சி.யூ. பிரிவு , இதயம், எலும்பு முறிவு, டி.ஜி.ஓ. மகப்பேறு அறுவை சிகிச்சை டாக்டர்களை நியமிக்க வேண்டும். தற்போது ஒதுக்கப்பட்ட 7 டாக்டர்கள் என்ற நிலையை மாற்றி, 15 டாக்டர்கள் நியமிக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு நிலவுவதால் அங்கு தனியார் சுகாதார துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.செவிலியர் பற்றாக்குறை, மருந்து கட்டுநர்கள் பற்றாக்குறை தீர்க்க வேண்டும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள குறைகளை உடனடியாக போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Uttamapalayam Government Hospital ,Uttamapalayam ,Dinakaran ,
× RELATED உத்தமபாளையத்தில் பஸ் மோதி தூய்மை பணியாளர் பலி